தனக்கான உணவுப் பொதி, சரியான நேரத்தில் சாரதி அறையில் வைக்கப்படவில்லை என்று கூறி,
ரயிலை இயக்க மறுத்த ரயில் சாரதி மீது ரயில்வே திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குருநாகலிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ரயிலே, மேற்படி சாரதியினால் இவ்வாறு இயக்க மறுக்கப்பட்டுள்ளது.
தனக்கு உணவுப் பார்சல் சரியான நேரத்தில் கிடைக்காததால் கோபமடைந்த சாரதி, ரயிலை இயக்குவதற்குப் பதிலாக ஓய்வு அறையிலேயே தங்கியதால், பல மணி நேரம் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.