கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, துப்பாக்கிச் சூடு

நடத்திய கமோண்டோ சமிந்துவும், செவ்வந்தியும் ஒத்திகை பார்த்துள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களான இருவரும் சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சென்று ஒத்திகை பார்த்து, திட்டத்தை ஒழுங்கமைத்ததாக, கொழும்பு குற்றப்பிரிவை சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவலை, தற்போது தடுப்புக் காவலில் உள்ள மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த சந்தேக ஒருவர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த நபரே அவர்கள் இருவரையும் நீதிமன்ற அறையை காட்டுவதற்கு முன்வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிமன்ற அறையைக் காட்ட முன்வந்ததற்காக செவ்வந்தியிடமிருந்து 2000 ரூபாய் பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற அறையை காட்டிய பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் செவந்தியும், துப்பாக்கிச்சூட்டு நடத்திய பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்கும் முடிவுகளை உட்பட இருவரும் நடித்து ஒத்திகை பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி