பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளின் சுமை அதிகரிப்பால் மாணவர்கள் மத்தியில்
பல உடல்நலப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அளவுகோல்களின்படி, ஒரு புத்தகப்பையின் சுமை மாணவர் ஒருவரின் நிறையிலிருந்து 15 முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும்.
குறித்த பிரச்சினை தொடர்பில் அவ்வப்போது விவாதங்கள் நடத்தப்பட்டாலும், சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றால் உரிய நடவடிக்கையை எடுக்க முடியவில்லை.
இதன் காரணமாக, பாடசாலை மாணவர்களிடையே முதுகுத்தண்டு வலி, தலைவலி ,கழுத்து வலி மற்றும் நரம்பு தொடர்பான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும், ஒரு நாளைக்கு பாடசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.