சிகரெட் வரி வசூலிக்கும் முறை தவறானது என்று, இன்று (20) பாராளுமன்றத்தில் உண்மைகளை
முன்வைத்த ஹர்ஷ டி சில்வா கூறினார்.
ஒரு சிகரெட்டின் விற்பனைக்கு 75% வரி விதிக்கப்பட வேண்டும் என்பதுதான் உலக சுகாதார அமைப்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகக் காணப்படுகின்றனது என்று, அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்துக்களை தெரிவித்த அவர், சிகரெட் வரி குறித்து பாராளுமன்றத்தில் மிக விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"இந்த வரி, பல வருடங்களாக குறைந்து வருகிறது. ஏதோ ஒரு காரணத்தால், இது அரசாங்கத்திற்கு வரும் வருவாயை விட அதிகமாக உள்ளது. இதற்கான காரணம் எங்களுக்குத் தெரியும். நான் எந்தக் குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை. ஆனால் இது முறையாக பகுப்பாய்வு செய்யப்படாததால், நிறுவனத்தால் பெறப்பட்ட இலாபம் அரசாங்கத்தால் பெறப்பட்ட இலாபத்தை விட மிக அதிகம்.
“எனவே, சிகரெட் மீதான வரி பற்றி முற்றிலும் புதிய சிந்தனை முறையை நான் முன்மொழிகிறேன். அதைப் பற்றி இங்கே விவாதித்தோம். பணவீக்கத்துடன் மேலும் 4% சேர்ப்பதன் மூலம் இந்த வரி விதிக்கப்படுகிறது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியது. ஆனால் அந்தக் கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது, கடந்த ஆண்டு பணவீக்கம் 1.9 அல்ல, 1.2 என்று சுட்டிக்காட்டினோம். அப்படியானால், அந்த வரியை 5.2% ஆக அதிகரிக்க வேண்டும்.
“ஆனால், அனைவருக்கும் ஒரே வரியை விதிக்கும் போது, இந்த வகையான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உருவாக்கப்படுகிறது. இதில், புதிய சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் அவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள். அப்படி இல்லையென்றால், அவர்கள் பீடி புகைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதுதான் வாதம். எனவே, நிதிக் குழுவாக, பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருந்ததால், இதை நிறைவேற்றினேன் என்று நான் முன்மொழிகிறேன். வேறு எதற்காகவும் அல்ல. எனவே, நாம் பங்கேற்று புதிய சிகரெட் வரி விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்றார்.