யாழில் அண்மையில் கைது செய்யப்பட்ட  யூடியூப் சனலை நடத்தும் இளைஞனை எதிர்வரும்

02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த யூடியூப்  சனலை நடத்தும் இளைஞனின் அநாகரிக செயற்பாடு தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த யூடியூப்பர் கடந்த மார்ச் மாதம் 09ஆம் திகதி பண்டத்தரிப்பு பகுதிக்கு சென்றவேளை இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டார்.

விசாரணைகளை மேற்கொண்ட இளவாலை பொலிஸார் கடந்த 10ஆம் திகதியன்று அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இந்நிலையில் அவரை இன்றுவரை (19) விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவேளை எதிர்வரும் 02.04.2025 வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி