2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3,663 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 3 இலட்சத்து 98,182 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும், 75,965 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.