வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா
நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன நடைபெற்றன.
இந்தப் பெருவிழாவில் தமிழ்நாட்டின் சிவகங்கைமறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்த் ஆண்டகை, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், நெடுந்தீவு பங்குத் தந்தை உள்ளிட்ட அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கச்சத்தீவு திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வரையிலான பக்தர்கள் பங்கேற்றார்கள். இன்று சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவுறும்.
திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன யஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.