விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு,

இன்று (மார்ச் 15) காலை 8.00 மணி முதுல் 8.05 மணி வரை நடைபெற உள்ளது.

இன்று உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து உங்கள் பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இன்று நடைபெறவிருக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்குத் தேவையான துண்டுப் பிரசுரங்கள் தற்போது நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் ஜீ.ஜீ.வீ. ஷியாமலி தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி