தம்புளை - பக்கமுன வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த ஜீப் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது,
இதன்போது, ஜீப்பில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.