முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் இல்லை.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அது தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் பொலிஸ் தரப்புக்கு பயந்து ஒரு பொலிஸ் மா அதிபர் மறைந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஷானி அபேசேகர ஒரு திறமையான நபர் என்றும், மறைந்திருக்கும் தேசபந்து தென்னகோனை அவர் கைது செய்வார் என்றும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி