சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான

சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைவரும் அதை அங்கீகரிப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து கடினமான மாற்றங்களும் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்தை மிகவும் எளிதாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வரி செலுத்துவோருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், இந்த நாட்டில் உள்ள அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதி பிரதானி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மறுசீரமைப்பின் போது வரி செலுத்துவோரை பாதிக்காத வகையில் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை விவேகத்துடன் நிர்வகிப்பது முக்கியம் என அவர் கூறினார்.

அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை அரசு உடைமையின் கீழ் பராமரிக்கலாம் அல்லது பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன் பொது நிறுவனங்கள் பாதீட்டையோ? அல்லது அரச கடனையோ பாதிக்காத வகையில் பராமரிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதி பிரதானி  குறிப்பிட்டுள்ளார்.

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள அனைவரும் அதை அங்கீகரிப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்து கடினமான மாற்றங்களும் கடந்த இரு ஆண்டுகளில் நடந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது எதிர்காலத்தை மிகவும் எளிதாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி