புதிய மின்சார திருத்த சட்டமூலம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும், இதன் கீழ்  இலங்கை

மின்சார சபை (CEB) பிரக்கப்படுவதும் நீக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எங்கள் அரசாங்கம் எந்த மின் நிலையங்களையும் அல்லது மின்சார பரிமாற்றத்தையும் தனியார்மயமாக்காது.

முந்தைய அரசாங்கம் CEB-ஐ எட்டு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கத் திட்டமிட்டது, ஆனால் எங்கள் அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாதுஎன்று அவர் கூறினார்.

முன்பு ஒரு அலகுக்கு ரூ.30 ஆக இருந்த மின்சாரத்தின் விலையை எம்மால் ரூ.18 முதல் 19 வரை குறைக்க முடிந்துள்ளது,என்று அவர் கூறினார்.

மின்சாரம் மிகக் குறைந்த விலையில் வாங்கப்படுவதை NPP அரசாங்கம் எப்போதும் உறுதி செய்யும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப்போவதில்லை என புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

"சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள், டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்போகிறோமா அல்லது அவசர கொள்முதல்களுக்கு செல்கிறோமா என்று.

எங்களுக்கு அவசர மின்சார கொள்முதல்களுக்கு செல்ல எந்த அவசியமும் இல்லை. இப்போது இந்த நாட்களிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றாக்குறையாக இருந்தாலும், நாங்கள் முதலில் CEBயின் டீசல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து எடுப்போம்.

CEBயிடம் டீசலால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, அவற்றிலும் குறைந்த செலவில் இயங்கும் ஒன்றில் இருந்துதான் நாங்கள் எடுக்கிறோம்" என்று அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி