ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால், அதன் இடையே சிக்கியிருந்த 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் கெமுனு கண்காணிப்புப் படையின் நன்பெரியல் முகாமில் நிறுவப்பட்டுள்ள அனர்த்த நிவாரணப் பிரிவினரால் நேற்று (01) மாலை குறித்தக் குழுவினர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலன்னாவ பகுதியிலிருந்து நன்பெரியல் பகுதிக்கு சுற்றுலா சென்ற 75 சுற்றுலாப் பயணிகள், இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் உயருவதற்கு முன்னர், இராணுவத்தினர் விரைவான நடவடிக்கையின் மேற்கொண்டதன் விளைவாக பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடிந்ததாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.