முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாபர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தவுள்ளனர்.

தெற்காசியா குறித்த சொற்பொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளமை விசேட அம்சமாகும்.

மேற்படி, இந்திய விஜயத்தின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் குழுவுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

முன்னாள் ஜனாதிபதி மார்ச் 2 ஆம் திகதி நாட்டுக்கு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி