குளியாப்பிட்டி, ஹெட்டிபொல பகுதியில் நேற்று (27) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை ஹெட்டிபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகுலாகம பகுதியில் பன்றிகளை வேட்டையாடும்போது கவனக்குறைவாக சுடப்பட்டதன் விளைவாக சிறுமி இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் பாட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மகுலாகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்த போர 12 ரக துப்பாக்கி, குறித்த துப்பாக்கிக்கான 2025 அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி