வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு பதில் உரையை ஆற்றிய அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க,
இந்த ஆண்டுக்கான திசைகாட்டி அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டம், சமூகத்தின் அனைத்து குடிமக்களையும் கவனித்துக்கொள்வதற்கான திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்பதை குறிப்பாக வலியுறுத்தினார்.
இந்த பட்ஜெட், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளது என்றும், இது பெற்றோருக்கு வேதனையான அனுபவமாக உள்ளது என்றும் கூறிய அமைச்சர், ஹிந்தி நடிகர் அமிர் கான் இயக்கிய 'தாரே ஜமீன் பர்' திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் அதைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.