அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் யாரையும் கைவிடவில்லை எனவும் பாதிக்கப்பட்ட அனைத்து பிரிவினரையும்
உள்ளடக்கியுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று (25) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், “புள்ளிவிவரங்களுக்கு அப்பால் சென்று வரவு செலவு திட்டத்தின் பின்னணியில் உள்ள சிந்தனையைப் படிக்குமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம்.
“எங்களுடைய எதிர்கால பயணத்தின் அடிப்படை என்ன என்பதை வரவு செலவு திட்டம் சுட்டிக்காட்டுகிறது. ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளின் தொடர்ச்சியை நாங்கள் முன்வைப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள்.
“அந்த வாதத்தை உருவாக்கும் எதிர்க்கட்சி எங்கள் தொலைநோக்கு பார்வையை புரிந்துக்கொள்ளவே இல்லை” எனத் தெரிவித்தார்.