பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் பற்றி உயர் மட்ட விசாரணைகள் இடம்பெற்று

வருவதாகக் குறிப்பிட்ட ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்புக் காரணம் கருதி விசாரணை முடிவுகளை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை சபையில் தெரிவித்த அவர்,  இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ளுமாறும் எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில்  மேலும் தெரிவித்த அவர், பாதாளக் குழுக்களுக்கு மத்தியில் இடம்பெறும்  மோதல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது.மக்களின் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு தொடர்பில் உச்சளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட குழுக்களுக்கிடையில் இடம்பெறும் மோதல் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஏற்கனவே சபையில் தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சுசார் ஆலாேசனைக் குழுவில் ஜனாதிபதியும்  இது தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.

விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால் தகவல்களை பாராளுமன்றத்துக்கு தெரிவித்து, விசாரணைகளைக் குழப்ப முடியாது.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் குறிப்பிடப்படும் பொலிஸார், மற்றும் பாதுகாப்புத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன் நீதிமன்றத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலரிடமும் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தேவையான தகவல்களை மாத்திரம் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலதிக தகவல் தேவையென்றால் எதிர்வரும் (28) பாதுகாப்பு அமைச்சினதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினதும் செலவு தலைப்பு மீதான விவாதம் இடம்பெறுகிறது.

அதன் போது அறிந்து கொள்ளலாம். அப்போது விசாரணைகளுக்கு பாதிப்பில்லாத தகவல்களை வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி