காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சிக்கு சாத்தியம்!
T
The Leader Desk
நவம்பர் 24, 2024 • 1:26 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாலும், அடுத்த சில நாட்களில் அதன் வளர்ச்சி சாத்தியம் என்பதாலும் 12 ஆற்றுப்படுகைகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
- இதன்படி, கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் எனவும் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது இவ்வாறிருக்க, நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கீழே பெயரிடப்பட்டுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
- மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை 2.
எழுத்து அளவு:
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் எனவும் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் கீழே பெயரிடப்பட்டுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய ஆற்றுப்படுகைகள்
1. மல்வத்து ஓயா ஆற்றுப்படுகை
2. கலா ஓயா ஆற்றுப்படுகை
3. கனகராயன் ஆற்றுப்படுகை
4. பரங்கி ஆறு ஆற்றுப்படுகை
5. மா ஓயா ஆற்றுப்படுகை
6. யான் ஓயா ஆற்றுப்படுகை
7. மகாவலி ஆற்றுப்படுகை
8. மதுரு ஓயா ஆற்றுப்படுகை
9. முந்தெனியாறு ஆற்றுப்படுகை
10. கலோயா ஆற்றுப்படுகை
11, ஹெடோயா ஆற்றுப்படுகை
12. வில ஓயா ஆற்றுப்படுகை
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

