Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

போகொல்லாகம உட்பட 15 தூதுவர்கள் உடனடியாக இலங்கைக்கு அழைப்பு!

T

The Leader Desk

நவம்பர் 4, 2024 • 9:22 AM

போகொல்லாகம உட்பட 15 தூதுவர்கள் உடனடியாக இலங்கைக்கு அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் வீட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் ஏனையோரும் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறினார்.
எழுத்து அளவு:

இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகமவின் வீட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டினால் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இந்த குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறினார்.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஊழியர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள ஏனைய அரசியல் நியமனங்களை மாற்றியமைக்க தமது அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு மேலதிகமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் ஏனையோரும் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மீண்டும் அழைக்கப்பட்ட தூதுவர்கள் 

15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை வெளிவிவகாரச் சேவையைச் சேராத, ஆனால் அந்தப் பதவிகளில் இருக்கும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம, இந்திய உயர்ஸ்தானிகர் ஷேணுகா சேனவிரத்ன, அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் ரொட்னி. பெரேரா, ஜப்பான் தூதுவர், சுமங்கலபதி, மலேஷியா உயர் ஸ்தானிகர், நேபாள தூதுவர் சுதர்சன பத்திரன, (முன்னாள் விமானப்படை தளபதி) கியூபா தூதுவர் நிஷாந்த உலுகேதென்ன, முன்னாள் கடற்படை தளபதி, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ரவீந்திர விஜேகுணரத்ன, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உயர்ஸ்தானிகர் உதய  இந்துரத்ன, கென்ய தூதுவர் கனநாதன், சீ ஷெல்ஸ் உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவிவின் உறவினர் ஸ்ரீமால்  விக்கிரமசிங்க மற்றும் ஈரான் தூதுவர் மொஹமட் ஷஹீட் ஆகியோருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தூதுவர்களை போன்று தற்போது வெளிநாட்டு சேவையில் உள்ள அமைச்சர்களின் பிள்ளைகள், மனைவிகள் மற்றும் உறவினர்கள் பலரையும் மீண்டும் அழைக்க தீர்மானித்துள்ளதாகவும், அவர்களை டிசம்பர் 1 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு திரும்புமாறும் கூறப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதவிகளுக்கு தகுதியான வெளிநாட்டு சேவை நிபுணர்களை நியமிக்க புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அழைக்கப்பட்டுள்ள சிலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் எனவும், அவர்கள் ஒழுக்காற்று செயற்பட்டிருந்தால் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

போகொல்லாகம உட்பட 15 தூதுவர்கள் உடனடியாக இலங்கைக்கு அழைப்பு! | Tamil Leader | We Lead the Nation