Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

T

The Leader Desk

ஜூன் 9, 2022 • 4:49 AM

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
  • இவ்வாறு நாடு கடத்தப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.
  • நாட்களுக்கு முன்னர், குறித்த 15 பேரும் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளனர்.
  • இதன்போது குறித்த படகு அவுஸ்திரேலியாவை அண்மித்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த 15 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு  நாடு கடத்தப்பட்ட அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

19 நாட்களுக்கு முன்னர், குறித்த 15 பேரும் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளனர்.

இதன்போது குறித்த படகு அவுஸ்திரேலியாவை அண்மித்த போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு இன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் அவுஸ்திரேலியா இராணுவத்துக்குச் சொந்தமான ஏ.எஸ. வை. 975 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 4.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், இவர்களுடன் அவுஸ்திரேலியா பாதுகாப்பு பிரிவின் அதிகார்கள் பலரும் வருகைத் தந்திருந்தனர்.

பின்னர் குறித்த 15 பேரும் இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக  குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...