Tamil Leader News
முக்கியம்
17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●
செய்திகள்

மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு!

T

The Leader Desk

ஜூலை 16, 2021 • 11:25 AM

மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன்படி, மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நீடிப்பது குறித்து புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது.
  • தற்போதுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு மாறாமல் இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அதிகபட்சமாக 150 பேர் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அத்துடன் திருமண வைபவங்களையும் நடத்த அனுமதி வழங்கப்படும் மண்டபத்தில் இருக்கையைப் பொறுத்து நூற்றுக்கு 25 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

அதன்படி, மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு நீடிப்பது குறித்து புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது.

தற்போதுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு மாறாமல் இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சமய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறித்த சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக 150 பேர் பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண வைபவங்களையும் நடத்த அனுமதி வழங்கப்படும் மண்டபத்தில் இருக்கையைப் பொறுத்து நூற்றுக்கு 25 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாராந்திர சந்தை, பொருளாதார மத்திய நிலையம், செயலமர்வு , மாநாடுகள், கருத்தரங்குகள், விளம்பரப்படுத்தல் நடவடிக்களை மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புடவை விநியோகம், நூலகங்கள், வியாபார மத்திய நிலையங்கள், நடைபாதைகள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியன புதிய சுகாதார வழிகாட்டி மூலம் செயற்பட அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

கொரோனா தொற்று இன்றி உயிரிழந்தவர்களின் சடலங்களை 24 மணி நேரத்தில் இறுதி கிரிகைகள் செய்ய வேண்டும்.அச்சடங்கில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள் – ஸ்பாக்கள் – ஹோட்டல்கள் மற்றும் ஓய்வறைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் கெசினோக்கள் – இரவு விடுதிகள் மற்றும் பந்தய நிலையங்கள் ஆகியவற்றை தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...