Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நவம்பர் 14க்கு பின்னர் எங்களது போராட்டம் வெடிக்கும்! - ரணில்

T

The Leader Desk

நவம்பர் 10, 2024 • 4:54 AM

நவம்பர் 14க்கு பின்னர் எங்களது போராட்டம் வெடிக்கும்! - ரணில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொருளாதார பிரச்சினைகளை அரசியல் சேறு பூசி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • நவம்பர் 14க்கு பின்னர் எங்களது போராட்டம் தொடங்கும் என்றும் அவர் கூறுகிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி நேற்று (9) இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
  • நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும்.
  • நான் கேட்கும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை அரசியல் அவதூறுகளை பயன்படுத்தி மூடி மறைக்க முயற்சிக்காதீர்கள்.
எழுத்து அளவு:

பொருளாதார பிரச்சினைகளை அரசியல் சேறு பூசி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பர் 14க்கு பின்னர் எங்களது போராட்டம் தொடங்கும் என்றும் அவர் கூறுகிறார். 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி நேற்று (9) இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

தாம் எழுப்பிய உண்மையான பொருளாதார பிரச்சினைகளை அரசியல் சேறு பூசி மூடி மறைக்க முயல வேண்டாம் என கூறிய ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு எதிர்காலம் வேண்டுமானால் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அனுபவமிக்க அணியை பாராளுமன்றத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அந்த உரையில் மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி...

நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும். நான் கேட்கும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை அரசியல் அவதூறுகளை பயன்படுத்தி மூடி மறைக்க முயற்சிக்காதீர்கள்.

பாராளுமன்றம் திருடர்களின் கூடாரம் என்று இவர்கள் இப்போது கூறுகிறார்கள் . பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவோம் என்பதே அவர்களின் பொதுத் தேர்தலின் கருப்பொருள்.

எந்தவொரு பாராளுமன்றத்திலும் குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் உள்ளன.  ஆனால் 1931 ஆம் ஆண்டு முதல் ஆசியாவின் ஜனநாயக அமைப்பில் செயற்பட்ட ஒரேயொரு பாராளுமன்றம் இலங்கைப் பாராளுமன்றமாகும்.

எங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. ஜனாதிபதி மாத்திரமே பாராளுமன்றத்தை திருடர்களின் கூடாரம் என்கிறார் என்றும் ரணில் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...