Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நவம்பர் -14 பாராளுமன்றத்தை சுத்தம் செய்யும் சிரமதான நாளாகும்! -ஜனாதிபதி அநுர குமார

T

The Leader Desk

அக்டோபர் 24, 2024 • 8:22 AM

நவம்பர் -14 பாராளுமன்றத்தை சுத்தம் செய்யும் சிரமதான நாளாகும்! -ஜனாதிபதி அநுர குமார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடைமழையில் நனைந்துகொண்டு பொலன்னறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள்.
  • மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலன்னறுவையில் இருந்து பெற்றுக் கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது.
  • தங்கக் கட்டிகளை கடத்தி வந்து சுங்கத்தில் அகப்பட்டவர்கள் அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்து கையை உயர்த்தினார்கள்.
  • அந்தளவிற்கு அருவருப்பு நிலைக்கு உள்ளாகியிருந்த பாராளுமன்றத்தைக் கலைத்து மக்களுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும்.
எழுத்து அளவு:

அடைமழையில் நனைந்துகொண்டு பொலன்னறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலன்னறுவையில் இருந்து பெற்றுக் கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது.

பொலன்னறுவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 
 
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
 
பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை புதிய திசைக்கு அனுப்பி வைப்பதற்காக தேசிய மக்கள் சக்திக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நாட்டில் இயல்புநிலையை பேணிவந்து மக்களுக்கு அவசியமான நிவாரணங்களையும் நாட்டைக் கட்டியெழுப்ப அவசியமான திட்டங்களையும் வகுத்துக்கொண்டு மூவரைக் கொண்ட அமைச்சரவை இயங்கிவருகிறது. 
 
நவம்பர் 14 ஆம் திகதிய வெற்றிக்குப் பின்னர் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கொள்கை வெளியீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம். 
 
ஜனாதிபதித் தேர்தல் மேடையில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருந்த பாசறையில் இருந்து என்ன கோரினார்கள்? பௌத்த பிக்குமார்களுக்கு அன்னதானம் கிடைக்கமாட்டாது, பௌர்ணமி தினத்தை இல்லாதொழிப்பதை உள்ளிட்ட பல விடயங்களை கூறினார்கள். அவையனைத்துமே பொய்யான புனைகதைகள் என்பது கடந்த ஒரு மாத காலத்துக்குள் நிரூபிக்கப்பட்டுவிட்டது. 
 
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு தற்போது ஒரு கூட்டத்தைக் கூட நடத்த முடியாமல் போயுள்ளது. 
 
இந்த பொதுத் தேர்தல் எந்தவிதமான போட்டியும் இல்லாமல் சோர்ந்துபோன ஒரு தேர்தல் என சிலர் கூறுகிறார்கள். எனினும், இந்த தேர்தலில் இலங்கை வரலாற்றின் மிகவும் தனித்துவமான வெற்றியை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுப்பது உறுதியானதாகும். கடந்த பாராளுமன்றம் பற்றி மக்கள் மத்தியில் எதிர்ப்பே நிலவியது. தங்கக் கட்டிகளை கடத்தி வந்து சுங்கத்தில் அகப்பட்டவர்கள் அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்து கையை உயர்த்தினார்கள்.
 
அதைப்போலவே, அங்குமிங்கும் கட்சிதாவி இறுதியில் எங்கே இருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடியாத திரிபு நிலை உருவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக பள்ளிப்பிள்ளைகள் பாராளுமன்றம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தளவிற்கு அருவருப்பு நிலைக்கு உள்ளாகியிருந்த பாராளுமன்றத்தைக் கலைத்து மக்களுக்கு வாய்ப்பினை வழங்கியிருக்கின்றோம். 
 
நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறப்போவது ஒரு தேர்தல் அல்ல, சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானமாகும். நவம்பர் 14 ஆம் திகதி என்பது இலங்கையில் பாராளுமன்றத்தை சுத்தம் செய்தவற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...