மொனராகலை மாவட்ட முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க செலுத்திச் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொனராகலை பிபில வீதியின் நக்கலவத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செலுத்திச் சென்ற வாகனத்துக்குள் புகுந்த குளவியை விரட்ட முற்பட்ட போது வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முன்னாள் எம்.பி.க்கு காயம் ஏதும் ஏற்படவில்லை, வாகனம் சேதமடைந்துள்ளது