ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு
துரோகம் இழைத்த எவருக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுக்களை வழங்காது என அந்தக் கட்சி கூறுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
“எங்கள் கட்சிக்கு துரோகம் இழைத்த ஒரு பிரிவினர் உள்ளனர். அந்த பிரிவினரின் அரசியல் நிலவரம் பற்றி நான் பேச விரும்பவில்லை.
கட்சிக்குத் துரோகம் செய்த எவருக்கும் மீண்டும் கட்சியில் உயர் பதவிகளோ, வேட்புமனுவோ வழங்குவதில்லை என கட்சி முடிவு செய்துள்ளது. இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாம் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.