ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான
அனைத்து தேர்தல் பிரசாரங்களும் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (18) நள்ளிரவுக்குப் பின்னர் பிரசாரத்தில் ஈடுபடுவோர் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைதியான காலப் பகுதியில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக வேட்பாளர்களை விளம்பரப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.