அரச ஊழியர்களின் சம்பளத்தை

24 சதவீதத்தால் அதிகரிப்பதோடு, அடிப்படைச் சம்பளத்தை 57,500 ரூபா வரையும், 17,500 ஆக காணப்படுகின்ற வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 ரூபா வரையும் அதிகரிப்போம். 6-36% ஆக காணப்படுகின்ற வரி சூத்திரத்தை 1- 24%  வரை குறைப்போம். 2014 இல் இருந்து அரச சேவையில் இணைந்து கொண்டவர்களுக்கு கிடைக்காத ஓய்வூதியத்தை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த விடயங்களை குறிப்பிடும்போது இதுவரையும் உறங்கிக் கொண்டிருந்த ஜனாதிபதி திடீரென விழித்தெழுந்து, அரச ஊழியர்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த பிரேரணையை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். அரச ஊழியர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சம்பள அதிகரிப்பை கோரியபோது, அந்த சந்தர்ப்பத்தில் வற்வரியை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என மக்களை அச்சமூட்டி, அரச ஊழியர்கள் தொடர்பில் பிழையான பிம்பம் ஒன்றை உருவாக்கினார். வற்வரியை அதிகரிப்பதன் ஊடாகவே அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியும் என நிதி அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கும் தெரிவித்தார்.
 
ஆனால் இன்று அவ்வாறு எதுவுமில்லை. எனவே அரசாங்கத்தின் பொய்களுக்கும் தந்திரங்களுக்கும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
 
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யும் 33 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(03) மாலை புத்தளத்தில் மிக வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
 
விவசாயத்திற்காக பெறுமதியான வேலைத்திட்டங்களை தயாரித்து இருக்கின்றோம். நெல்லுக்கான நிர்ணய விலை, 50 கிலோ கிராம் உரமூடை ஐயாயிரம் ரூபாவிற்கு வழங்கும் நிவாரண முறை, QR Code ஊடாக எரிபொருள் நிவாரணம் என்பனவற்றை வழங்குவதோடு, விவசாய கடனையும் இரத்து செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
நான் விவசாய கடனை இரத்து செய்வேன் என்று கூறும்போது, ஜனாதிபதியும் அதனையே கூறுகின்றார். இப்பொழுது ஜனாதிபதி அவ்வாறான கதைகளை கூறினாலும், இரண்டரை வருடம் என்ன செய்தார் என கேட்கின்றோம். நாம் விவசாய கடனை இரத்து செய்வோம் என கூறிய பின்னரே ஜனாதிபதி அதனை கூறுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
 
நாட்டை வங்குரோத்தடையைச் செய்தவர்களை பாதுகாக்கின்ற செயற்பாட்டையே இரண்டரை வருட காலமாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் செய்தது. இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
 
திருடர்களுடன் நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்பதால்தான் நாம் பொறுப்பை ஏற்கவில்லை.
 
தட்டிலே வைத்து பிரதமர் பொறுப்பையும் ஜனாதிபதி பதவியையும் தந்தபோதும், திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினாலும், திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலும் அந்த பொறுப்புக்களை நாம் மறுத்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி