Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

தேர்தலுக்கு 13 மில்லியன் ரூபாய்தான் செலவாகும் - அநுரகுமார!

T

The Leader Desk

ஏப்ரல் 27, 2022 • 2:33 AM

தேர்தலுக்கு 13 மில்லியன் ரூபாய்தான் செலவாகும் - அநுரகுமார!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
  • தேர்தலுக்கு 13 மில்லியன் ரூபாய்தான் செலவாகும்.
  • தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு தீர்வையும் முன்வைப்பதற்கு ஜே.வி.பி உடன்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமென அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் என குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் அமைத்து அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விருப்பமான புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்றார்.“நிதிப் பிரச்சினையால் இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்த முடியாது என்று சிலர் கூறுகின்றனர். 

இது காலத்தைக் கொல்லும் நொண்டிச் சாக்கு. தேர்தலுக்கு 13 மில்லியன் ரூபாய்தான் செலவாகும். தேவையில்லாத விஷயங்களுக்கு அதிகப் பணம் செலவழிக்கிறோம். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பது விலை உயர்ந்ததாக இருக்காது,'' என்றார்.

தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு தீர்வையும் முன்வைப்பதற்கு ஜே.வி.பி உடன்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே எங்களின் முன்மொழிவு. பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும், பின்னர் மக்கள் விருப்பமான புதிய அரசாங்கத்தை உருவாக்க பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். 

இந்த பாராளுமன்றத்தின் கீழ் முன்மொழியப்படும் எந்தவொரு தீர்வும் இந்த நெருக்கடியை தீர்க்காது,’ என்றார்."ஜனாதிபதி ராஜினாமா செய்ய விரும்பவில்லை என்றால், அவர் வீட்டிற்கு செல்லும் வரை மக்கள் தங்கள் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜே.வி.பியின் மூன்று எம்.பி.க்கள் ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...