தனமல்வில பிரதேசத்தில் மாணவி
ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில், 16 வயது சிறுமியை ஒரு வருடமாக பலரும் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸாரிடம் மறைக்க முயன்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.