மட்டக்களப்பில் மண் அகழ்வதற்கான

அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் உட்பட இருவர் இன்று வியாழக்கிழமை (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லடி கடற்கரையில் மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சந்தேக நபர்கள் இருவரையும் பொலன்னறுவை பொலிஸ் தலைமையகத்துக்கு கொண்டுசென்று விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தி கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை குறித்த அமைச்சரின் சகோதரனும் அவரின் முன்னாள் செயலாளரும் கடந்த 2022ஆம் ஆண்டு காணி விவகாரம் ஒன்றுக்காக ஒருவரிடம் மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி