1200 x 80 DMirror

 
 

தற்போதைய பொரளை பொலிஸ்

நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக விதானகேவுக்கு இலஞ்சம் வழங்க முயன்ற பிரதிவாதிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபந்தகே உத்தரவிட்டுள்ளார். 

அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பேருவளை, சமட் மாவத்தையைச் சேர்ந்த பிரதிவாதிக்கே நீதிமன்றினால் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
2018 ஆம் ஆண்டு, முறைப்பாட்டாளர் பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது, ​​பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்ததுடன மாடுகள் ஏற்றப்பட்ட லொறி ஒன்றையும் கைப்பற்றி களுத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்
 
பேருவளை பொறுப்பதிகாரியைச் சந்தித்த குற்றவாளி, பொலிஸாரின் பிடியில் உள்ள மாட்டு லொறியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தபோது பொலிஸ் பொறுப்பதிகாரி அதற்கு மறுத்துள்ளார்.
 
தனது முயற்சியைக் கைவிடாத குற்றஞ்சாட்டப்பட்ட நபர், தம்மிடம் இருந்த உறையொன்றை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கொடுத்து, மாட்டுகளையும் லொறியையும் விடுவிக்குமாறு கூறியதாகவும் அப்போது பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அவரது அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு உறையிலிருந்த  பணத்தை எண்ணியபோது 25,000 ரூபா அதில் காணப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இலஞ்சம் வழங்குவது சட்டவிரோதமான செயல் என சுட்டிக்காட்டிய  அதேநேரம் அவரைக் கைது செய்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைத்ததன் பின்னர் சட்டமா அதிபர் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
 
பல வருடங்களாக வழக்கை விசாரிக்கப்பட்ட நிலையில் பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
 
அவருக்கு எதிராக இலஞ்சம் பெற முயற்சித்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி