ஹபரணை பொலிஸ் நிலையத்துக்கு

அருகில் உள்ள பொலிஸ் வீதித் தடையில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைக் கொன்றதாக அநுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்தார்.

அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி திரு.நளீன் டி ஹேவாவசம் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 
ஹிகுராக்கொட சன்ரைஸ் தோட்டத்தைச் சேர்ந்த லீலாரத்ன மஹேஸ் இந்திக்க குலசேகர என்ற வர்த்தகருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
1998 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி அல்லது அதனை அண்டிய தினத்தில்  ஹபரணை பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பொலிஸ் வீதித் தடையில பணிபுரிந்த எஸ். எஸ். ஆர். குணரத்ன என்ற பொலிஸ் கான்ஸ்டபிளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த குற்றஞ்சாட்டப்பட்ட வர்த்தகருக்கு எதிராக இலங்கை குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி