எதிர்வரும் ஜனாதிபதித்

தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தி வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு தீர்மானித்துள்ளது.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுதந்திர ஜனதா சபையின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"நாங்கள் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய மக்கள் சக்தியே முன்வைக்கிறது. இது ஒரு வலுவான மற்றும் பரந்த சக்தியாகும்.

அரசாங்கத்தை தோற்கடிக்கும் போராட்டம் தொடர்பில் எமது கட்சி நடத்திய கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாகவும் சரித ஹேரத் கூறுகிறார்.

நாட்டில் பரந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்வரும் சில வாரங்களில் எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி