நாடுபூராவும் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் திருத்தி, எதிர்வரும் வாரத்திலிருந்து 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுமென அரசாங்க தகவல்கள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் காரணமாக மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி கொழும்பு, கம்பஹ, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இம்மாத கடைசி வரை நீடிக்கப்படுமெனவும் கூறப்படுகிறது.

அதோடு, மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ள கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்தே சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவிருக்கிறது.

கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள 6 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு எதிர்வரும் திங்கற்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும். என்றாலும் அந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படுமென கடந்த புதன்கிழமை (15) அறிவிட்டது.

தனி மனித இடைவௌியை மட்டுப்படுத்த அவசரப்பட வேண்டாமென உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையிலேயே அரசாங்கம் இப்படியான நடவடிக்கை எடுத்திருப்பது தெரிகிறது. தவிரவும், மனித இடைவௌிளை மட்டுப்படுத்துவது குறித்து இப்போதே எதிர்வு கூற முடியாதென சுகாதாரத் துறை குறிப்பிடுகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி