Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அடுத்த 12 மணிநேரத்துக்குள் IMF உடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து!

T

The Leader Desk

ஆகஸ்ட் 31, 2022 • 8:38 AM

அடுத்த 12 மணிநேரத்துக்குள் IMF உடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விடயம் தொடர்பான நேரடியாக தொடர்புடைய நான்கு வட்டாரங்கள் இதனை தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (1) வியாழக்கிழமை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர்களை வரை கோரியுள்ளது.
  • இலங்கைக்கு வருகை தந்துள்ள, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், திறைசேரியின் செயலாளர் உட்பட இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.
  • இதேவேளை, பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அடுத்த 12 மணிநேரத்துக்குள், அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:



விடயம் தொடர்பான நேரடியாக தொடர்புடைய நான்கு வட்டாரங்கள் இதனை தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த உடன்படிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை (1) வியாழக்கிழமை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம்  இருந்து 3 பில்லியன் டொலர்களை வரை கோரியுள்ளது.

இந்த நிலையில் கடன் இணக்கம் தொடர்பிலான கருத்துக்கான கோரிக்கைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரோய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், திறைசேரியின் செயலாளர் உட்பட இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுகள் முன்னேற்றம் கண்டுள்ளதாக நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிந்திக் கிடைத்த தகவல்களின்படி, அடுத்த 12 மணிநேரத்துக்குள், அரசாங்கத்துக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...