Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

சீரற்ற காலநிலையால் 12, 289 பேர் பாதிப்பு : பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கு தடை

T

The Leader Desk

ஆகஸ்ட் 3, 2022 • 3:37 AM

சீரற்ற காலநிலையால் 12, 289 பேர் பாதிப்பு : பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கு தடை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து, கினிகத்ஹேன பகதுலுவ பகுதியிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்ரெதன் பகுதியிலும் இன்று (3) அதிகாலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
  • மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்றுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
  • இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
  • மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக தொடருந்து சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து, கினிகத்ஹேன பகதுலுவ பகுதியிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்ரெதன் பகுதியிலும் இன்று (3) அதிகாலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்றுவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை ஆகிய 8 மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும் ஆபத்துள்ள பிரதேசங்களில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மலையக தொடருந்து சேவைகள் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக தொடருந்து சேவை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, இன்று காலை 8.30, முற்பகல் 9.45 ஆகிய நேரங்களில் கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்க இருந்த தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், காலை 8.30, முற்பகல் 10.15 ஆகிய நேரங்களில் பதுளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணிக்க இருந்த தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

rnஇதேவேளை,  சீரற்ற காலநிலையினால், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹற்றன் – கொழும்பு மற்றும் ஹற்றன் – கண்டி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து, கினிகத்ஹேன பகதுலுவ பகுதியிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஸ்ரெதன் பகுதியிலும் இன்று (3) அதிகாலை முதல் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...