Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

12 வயது சிறுமியின் அதிா்ச்சிகர செயல்

T

The Leader Desk

ஜூன் 20, 2023 • 10:57 AM

12 வயது சிறுமியின் அதிா்ச்சிகர செயல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி சிறுமி வெலிமடை நகரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறுமியை அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
  • இந்நிலையில், பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியை மருத்துவரிடம் ஆஜர்படுத்தியபோது, ​​சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
  • இதையும் மீறி, ஜூன் மாதம் 18ம் திகதி, சிறுமி மீண்டும் நகாில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எழுத்து அளவு:
12 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை கட்டுப்படுத்த முடியவில்லை என அவரது பெற்றோர் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.

விசாரணைகளின் பின்னர் குறித்த சிறுமி, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இருந்த போதிலும், நன்னடத்தை அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் சிறுமியின் தந்தை மீண்டும் ஒருமுறை அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தாா்.

இருந்த போதிலும், கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி சிறுமி வெலிமடை நகரில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறுமியை அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாரின் சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியை மருத்துவரிடம் ஆஜர்படுத்தியபோது, ​​சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதையும் மீறி, ஜூன் மாதம் 18ம் திகதி, சிறுமி மீண்டும் நகாில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னா் இது குறித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த தாயும், தந்தையும் பொலிஸ் நிலையத்தினுள் உள்ள பொது மலசலகூடத்தில் விஷத்தினை குடித்துள்ளனா்.

இதனையடுத்து அவா்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தந்தை சிகிச்சை முடியும் முன்னரே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், தாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் வைக்கப்பட்ட சிறுமியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதும் உரிய முறையில் பராமரிக்க முடியாத நிலையில் உள்ளதாக தொிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பாலியல் துஷ்பிரயோகம் தொடா்பில் சந்தேகத்தில் 28 வயதான நபரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

குறித்த நபர் எதிா்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...