Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

12 ஆவது நாளாகவும் தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 20, 2022 • 3:00 AM

12 ஆவது நாளாகவும் தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதேவேளை, நேற்று ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் ஒளி வீசி அஞ்சலி செலுத்தினர்.
  • இதேவேளை காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடக மையத்தில் சட்டத்தரணி நுவான் போப்பகே உட்பட போராட்டத்தில் பங்காற்றும் தரப்பினர் சிலர் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
  • இதேவேளை, இன்று முதல் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் ஒரு வார ஹர்த்தால் அனிஷ்டிப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
எழுத்து அளவு:

இதேவேளை, நேற்று ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் ஒளி வீசி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன் அங்கு மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசு தொடர்ந்தும் போராட்டகாரர்களை கலைக்கும் நோக்கில் செயற்பட்டுவருகின்றது. ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் சில பகுதிகளில் தடைகள் போடப்பட்டிருந்ததுடன் காலிமுகத்திடலை அண்டிய பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடக மையத்தில் சட்டத்தரணி நுவான் போப்பகே உட்பட போராட்டத்தில் பங்காற்றும் தரப்பினர் சிலர் தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது அவர்கள் பிரதானமாக சமீபத்திய போராட்டங்களில் பொலிஸாரின் தலையீடு அதனால் ஏற்படும் அமைதியற்ற நிலை மற்றும் ஆர்ப்பாட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்கள் அகற்றப்படுகின்றமை என்பவற்றை கண்டித்து கருத்துக்களை வெளியிட்டனர்.

இதேவேளை, இன்று முதல் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் ஒரு வார ஹர்த்தால் அனிஷ்டிப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

எனினும் இதற்கு, முல்லைத்தீவைத் தவிர வடக்கு, கிழக்கில் ஆதரவு தெரிவிக்கப்படவில்லை. 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...