ரி20 உலகக் கிண்ணத் தொடரில்

மூன்றாவது போட்டியை எதிர்கொள்ள புளோரிடா சென்ற இலங்கை அணி, ஆரம்ப சுற்றில் தனது இறுதிப் போட்டிக்காக நேற்று (12) மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள சென்ற் லூசியாவுக்குச் செல்லவிருந்த நிலையில், புளோரிடாவில் மோசமான வானிலை காரணமாக அவர்கள் தங்கள் விமானங்களை கைவிட்டு, புளோரிடாவில் தங்கியிருந்தனர்.

புளோரிடாவில் நேற்று காலை முதல் பெய்துவரும் மழை 36 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்வதால் அந்தப் பகுதி வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. 
 
இந்த வானிலை காரணமாக, புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் விமான நிலையத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணி முதல் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டன.
 
இலங்கை அணியை சென்ற் லூசியாவுக்கு அழைத்துச் செல்வதற்கான விசேட விமானமும் லாடர்டேல் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் கடும் மழை காரணமாக  அது புறப்பட முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் காரணமாக இலங்கை அணி வானிலை சீராகும் வரை புளோரிடாவில் தங்கியிருப்பதைத் தவிர வேறு வழியில்லை, வானிலை சீராகும் வரை விமானத்தை தாமதப்படுத்த வேண்டும்.
 
இதேவேளை, இலங்கை மற்றும் நேபாள அணிகளுக்கிடையிலான போட்டியை காண வெகுதூரத்தில் இருந்து வந்துள்ள இலங்கை மற்றும் நேபாள கிரிக்கெட் இரசிகர்களும் இந்த காலநிலையால் பாதிக்கப்பட்டு புளோரிடாவில் தங்கியுள்ளதாக தெரிகிறது. 
 
இந்த மழையால் அவர்கள் பார்க்க வந்த போட்டியும் ஒரு பந்து கூட விளையாடாமல் கைவிடப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி