சட்டமா அதிபரான ஜனாதிபதி

சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்துக்கு  ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் இரண்டாவது நாளாகவும் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் அரசியலமைப்பு பேரவை நேற்று (10) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரேரணைக்கு அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அரசியலமைப்பு சபையில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டார்.

அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு மேலும் கலந்துரையாட விரும்புவதால் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், எதிர்வரும் 18ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளதாகவும் சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சேவையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி