வீரகுல பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்ட

திட்டமிட்ட குற்றக் கும்பலின் தலைவரும் சக்திவாய்ந்த போதைப்பொருள் வியாபாரியுமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை புஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

கம்பஹா நீதிவான் சிலானி பெரேராவினால் இன்று (10) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் தலைவனாகக் கருதப்படும் சஞ்சீவ கணேமுல்ல என்றழைக்கப்படும் சஞ்சீவ குமார கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வந்திருந்தபோதே கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி