பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்து

விட்டது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாதளவுக்கு அரசியல் இம்மாவட்டம் காணப்படுகிறது.

மக்கள் கபிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள நாங்கள் அந்த மக்களின் அரசியல், பொருளாதார நிலைமைகளில் ஆழமான அறிவு கொண்டு உழைத்து வருகிறோம்.இந்த உழைப்பில் நாங்கள் அனைவரும் பங்குதாரர்களாக மாற வேண்டும். இது தமிழரசுக் கட்சியின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரக்காந்தன் தெரிவித்தார்.

சிவநேசதுரை சந்திரக்காந்தன் எழுதிய “ஈஸ்டர் படுகொலை இன-மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்“ தொடர்பிலான நூல் அறிமுகம் அம்பாறை மாவட்டம் காரைதீவு மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நான் அரசியல் கடலில் தற்செயலாக நீந்திக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன்.அல்லது இழுத்து வரப்பட்ட ஒரு மனிதன். எனக்கான அடையாளமும் அங்கீகாரமும் மட்டக்களப்பு மண்ணில்தான் கிடைத்திருக்கிறது.எனக்கு கிடைத்த அடையாளமும் அங்கீகாரத்தையும் சரியாக பயன்படுத்தி மக்கள் பணியாக மாற்றி செய்து காட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை தலையிலும் தோளிலும் சுமந்து கொண்டிருக்கின்றேன் என்பதை நீங்கள் எவரும் மறக்க மாட்டீர்கள்.

காரைதீவு பகுதியில் அதிக எண்ணிக்கையான வைத்தியர்கள் உள்ளார்கள். அங்கு அதிகளவான கார்கள் இருக்கின்றன. ஆனால் அங்கு பெற்றோல் நிரப்பும் நிலையம் இல்லை. இதுவும் ஒரு அரசியல்.இதுவும் எமது சமூகத்தின் பொருளாதார அரசியல்.இவ்வாறு உள்ள நிலையில் அம்பாறை மாவட்ட மக்களின் ஆணையை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்ற கேள்வி எழுகின்றது.

இந்த ஆணையை சரியாக எப்படி பயன்படுத்துவது? இப்போது எமது கட்சிக்கு இம்மாவட்டத்தில் அரசியல் செய்கயும் தேவை எழுந்துள்ளது என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி

9

bad boy.....