மொனராகலை பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்குள்

வைத்து 30 வயதுடைய அமெரிக்கப் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் ஒருவர் மொனராகலை பொலிஸின் புலனாய்வு அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் பிபில கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தன்னார்வ ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

இவர் தனது பணியிடத்துக்குச் செல்வதற்காக மொனராகலை பஸ் நிலையத்துக்குச் சென்று பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தபோது ​​பஸ் துப்புரவு பணியாளர் ஒருவர் அவரது உடலைத் தொட்டு பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபர் பக்கினிகஹவெல பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடையவராவார்.

இந்தச் சம்ப்வம் தொடர்பில் மொனராகலை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் மகளிர் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி