கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான

நிலையத்தில் கொக்கேய்னுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுக் (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் 31 வயதான உகண்டாவைச் சேர்ந்தவர் எனவும், இவர் கொக்கேய்ன் மாத்திரைகளை உட்கொண்டு கட்டாரிலிருந்து இலங்கை வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் 14 கொக்கெய்ன் மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி