ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்

புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் முதலாவது மக்கள் பேரணி இன்று (08) பிற்பகல் 2.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

"எதிர்காலத்துக்காக ஒன்றுபடுவோம் - வெற்றிக்காக" என்ற தொனிப்பொருளில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான அம்பலாந்தோட்டை பொதுப் பேரணி விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
 
புதிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நடத்திய முதலாவது பொதுக்கூட்டத்தில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். 
 
எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பரந்த கூட்டணியை உருவாக்குவோம் என கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த ஜயரத்ன, சாமர லன்ச ஜயரத்ன, பிரியங்கா ஜயரத்ன, ஜகத் பிரியநாயக்க, ஜகத் பிரியங்கர, எஸ். எம். முஷாரப், அலி சப்ரி ரஹீம், நிமல் பியதிஸ்ஸ, பிரமநாத் சி.தொலவத்த, ஜகத் புஷ்பகுமார, சுதத் மஞ்சுள மற்றும் புதிய கூட்டணிக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மேயர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி