யாழ்ப்பாணத்தில் பல்வேறு

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர், நேற்று (07)  வெள்ளிக்கிழமை கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , வெளிநாட்டில் வசித்துவரும் நபர் ஒருவரின் வீட்டில் இருந்தே ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன 
 
யாழில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இளைஞர்  ஒருவர் சுன்னாகம் ஈவினை பகுதியில் மறைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்ற தகவலில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது செய்தனர். 
 
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் வசித்துவரும் நபர் ஒருவரின்  வீட்டில் ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், வீட்டுக்கு சென்ற பொலிஸார் , மூன்று கஜேந்திரா வாள்கள் , நான்கு வாள்கள் , முகத்தை மறைக்கும் துணிகள் , ஜக்கெட் , தலைக்கவசம் என்பவற்றை மீட்டுள்ளனர். 
 
வீட்டின் உரிமையாளரான வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கும் , கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையிலான தொடர்பு குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , வெளிநாட்டில் வசிக்கும் நபருக்கு குறித்த இளைஞன் யாழில் கூலிப் படையாக செயற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 
 
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த நபரின் தொலைபேசி தொடர்புகள் மற்றும் வங்கி கணக்கு விபரம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி