மது போதையில் பொலிஸ் ஜீப்பைச் செலுத்தி

விபத்தை ஏற்படுத்தி பொதுக்களின் சொத்துக்களுக்குப் பலத்த சேதம் விளைவித்த இரண்டு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட ஆறு பேர் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட ஆறு பேர் மீது உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா நெடுங்கேணி தெற்குப் பகுதியில் கடந்த மாதம் 4ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் ஏற்படுத்தப்பட்ட இந்த விபத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், அப்போது பொலிஸ் வாகனத்தில் இருந்த அதிகாரிகள் குடிபோதையில் இருந்ததாகக் குற்றம் சுமத்தினார்.

அந்த பொலிஸ் ஜீப்பில் புளியங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கடுமையான மது போதையில் காணப்பட்டுள்ளனர்.

குறித்த ஜீப் வீடு ஒன்றில் மோதியபோது அந்த அந்த வீட்டில் சுமார் 40 பிள்ளைகள் கல்வி கற்றுக் கொண்டிருந்தனர்.

நெடுஞ்சாலையை விட்டு விலகிச் சென்ற பொலிஸ் ஜீப் வீடு ஒன்றின் மீது மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளின் இந்தச் செயலுக்கு பல தரப்பிலுமிருந்து கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி