தாக்குதலுக்கு இலக்காகி ஹம்பாந்தோட்டை மாவட்ட

பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளான்.தாக்குதலுக்கு இலக்காகி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளான்.

இதனையடுத்து இந்த  மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மற்றைய பாடசாலை மாணவனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சந்தேக நபரை ஏனைய கைதிகளிடமிருந்து பிரித்து வைக்குமாறு அங்குணகொலபலஸ்ஸ சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை, பத்தேவெல வீதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனுக்கும், தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மாணவனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சடலத்தை ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறும்  பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்  எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி