பதவிய வெலிஓயா சம்பத் நுவர பொலிஸ் பிரதேசத்தில்

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் காணொளி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பத்நுவர பிரதேசத்தில் வசிக்கும் குறித்த சந்தேக நபர், தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவனைக்  கொடூரமாக தாக்கும் காட்சியை அயலவர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, வெலிஓயா சம்பத்நுவர  பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று சந்தேகஎநபரின் வீட்டை சுற்றிவளைத்தபோதிலும், அவர் ஏற்கனவே பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்  குகுல் சமிந்த அல்லது பிபிலே சமிந்த என அழைக்கப்படுபவர் எனவும், இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தச் சிறுவனைக் கொடூரமாக தாக்கியதாகவும், அவருக்கு பயந்து யாரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி